தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நடைபயண வழித்தடம் மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நடைபயண வழித்தடம் மாற்றம்
Published on

புதுக்கோட்டை,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பாதயாத்திரையை (நடைபயணம்) மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களில் நடைபயணத்தை முடித்துள்ளார். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதையடுத்து அண்ணாமலையின் நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது. நடைபயணம் நடைபெறும் பகுதிகளில் மத வழிபாட்டு தலங்கள், மக்கள் கூடும் இடங்கள், மருத்துவமனைகள் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மேற்கொள்ளவிருந்த "என் மண், என் மக்கள்" நடைபயண வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மச்சுவாடியில் இருந்து, பிருந்தாவனம் வடக்கு ராஜவீதி, மேலராஜ வீதி வழியாக அண்ணா சிலை செல்ல காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே அறிவித்த வழித்தடத்தில் செல்ல, காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் புதிய வழித்தடத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com