பிரதமர் மோடிக்கு நீண்ட ஆயுள் வேண்டி கோயிலில் தங்கத் தேர் இழுத்த பாஜகவினர்

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு வடிவுடையம்மன் கோவிலில் தங்கத் தேர் இழுத்து பாஜகவினர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடிக்கு நீண்ட ஆயுள் வேண்டி கோயிலில் தங்கத் தேர் இழுத்த பாஜகவினர்
Published on

சென்னை,

சென்னை திருவொற்றியூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு வடிவுடையம்மன் கோவிலில் தங்கத் தேர் இழுத்து பாஜகவினர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் காலம் வாழ வடசென்னை பாஜகவினர் வடிவுடையம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.

இதற்கு முன்னதாக பிரதமர் மோடியின் பெயரில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com