டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

சேத்தூரில் டாஸ்மாக்கடையை அகற்ற வலியுறுத்தி பா.ஜனதாவினர் ஆாப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
Published on

ராஜபாளையம்,

ஆர்ப்பாட்டம்

ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இப்பகுதியை பயணிகள், பெண்கள், மாணவ, மாணவிகள் என தினமும் எண்ணற்ற பேர் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இந்த கடையை அகற்ற வலியுறுத்தி பா.ஜ.க. இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பாண்டித்துரை முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்டத்தலைவர் சரவணன் துரை, முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஞான பண்டிதன், ராதாகிருஷ்ணன், விவசாய அணி மாநில துணைத்தலைவர் திருநாவுக்கரசு, இளைஞரணி நகர தலைவர் பூமாலை ராஜா, நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக் கடை

தமிழக அரசை கண்டித்தும், கடையை இடம் மாற்றக்கோரியும், தேர்தல் அறிக்கையில் கூறியபடி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அதேபோல சேத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் முறையான அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விரைவில் கடையை மூடாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com