காஞ்சீபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சீபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

காஞ்சீபுரம் சங்கர மடத்தின் எதிரே கடந்த வாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் எழிலரசு காஞ்சி சங்கர மடத்திற்கு எதிராக பேசியதாக தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் கேஎஸ்.பாபு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கல்வியாளர் அணி மாநில செயலாளர் விஜயலட்சுமி, மாவட்ட பொது செயலாளர்கள் வாசன், பார்த்தசாரதி, ருத்ரகுமார், மாவட்ட துணைத்தலைவர்கள் கூரம் விஸ்வநாதன், ஜம்போடை சங்கர், எல்லம்மாள், காஞ்சீபுரம் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் ஜீவானந்தம் மற்றும் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com