

கலசபாக்கம்,
டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கலசபாக்கத்தை அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தில் போளூர் செல்லும் பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலசபாக்கம் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், ''கேட்டவரம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கும் பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் இடையூறாக உள்ளது.
இதனால் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்'' என்றனர். இதனை வலியுத்தி வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.