22-ந்தேதி நடைபெறும் பா.ஜ.க. மாநாட்டில் கலந்துகொள்ளும் அமித்ஷா, தேசிய தலைவர்கள்.. ஏற்பாடுகள் தீவிரம்


22-ந்தேதி நடைபெறும் பா.ஜ.க. மாநாட்டில் கலந்துகொள்ளும் அமித்ஷா, தேசிய தலைவர்கள்.. ஏற்பாடுகள் தீவிரம்
x

கோப்புப்படம்

மாநாட்டு பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளை பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி வைத்துள்ளது. இரு கட்சிகளும் இணைந்து தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டு உள்ளன. இந்தநிலையில், தமிழகம் முழுவதும் கட்சியை பலப்படுத்தும் பணியில் பா.ஜனதா தீவிரமாக இறங்கி உள்ளது.

அதன் ஒரு பகுதியாக புதிய மாநிலத்தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் தலைமையில் நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மாநாடு நேற்று நடக்க இருந்த நிலையில், நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் மறைவு காரணமாக அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே ஒத்திவைக்கப்பட்ட மாநாடு வருகிற 22-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் தேசிய தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாட்டு பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளை நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 More update

Next Story