முதல் அமைச்சரின் தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு


முதல் அமைச்சரின் தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு
x

முதல் அமைச்சரின் தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது.

சென்னை,

மத்திய அரசு சமீபத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த நிலையில், தமிழக சட்டசபையில் அந்த மசோதாவை கைவிட வேண்டும் என்று அரசினர் தீர்மானத்தை கொண்டுவர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கொண்டு வந்து முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவிற்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தது. முன்னதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாவது, "வக்பு வாரிய சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. ஜனநாயக முறைப்படி சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. வக்பு சொத்துகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவே இந்த சட்டத்திருத்தம்; வக்பு சொத்துகளை நிர்வகிப்பதில் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு தருகிறது சட்டத்திருத்தம் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவிற்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

1 More update

Next Story