'பா.ஜ.க. யாருடன் கூட்டணி வைத்தாலும் தோல்வியடைவார்கள்' - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

பா.ஜ.க. யாருடன் கூட்டணி வைத்தாலும் தோல்வியடைவார்கள் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. விமர்சித்துள்ளார்.
சென்னை
சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-
"பா.ஜ.க.வினர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாருடைய படத்தை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்தி, இந்துத்துவா அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை நிராகரித்துக் கொண்டேதான் இருப்பார்கள். பா.ஜ.க. யாருடன் கூட்டணி வைத்தாலும் அந்த கூட்டணி தோல்வியடையும்."
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






