அதிமுகவை பாஜக விழுங்கி விடும் - திருமாவளவன் பேட்டி

திமுக கூட்டணியில் தான் விசிக பயணிக்கிறது. மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து இன்று ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது என கூறினார்.
அதிமுகவை பாஜக விழுங்கி விடும் - திருமாவளவன் பேட்டி
Published on

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அதிமுகவை பாஜக விழுங்கி சரித்துவிடும் என்று திரும்ப திரும்ப விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்புணர்வோடு சுட்டிக் காட்டியது. கவலையோடு சுட்டிக்காட்டியது. அதிமுக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு சுட்டிக்காட்டியது. ஆனால், அதை அப்படியே திருப்பி விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார்.

அவருக்கு இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று யாரோ சொல்லித் தருகிறார்கள் என்றுதான் நான் கருதுகிறேன். அவராகவே இந்த கருத்தை சொல்கிறார் என்று என்னால் ஏற்க முடியவில்லை. அதிமுகவிற்கு எதிராக பேசுவதாக அவர் கருதுகிறார் என்று நினைக்கிறேன். அதிமுக தொண்டர்கள் நான் எதற்காக சொல்கிறேன் என்று அவர்கள் புரிந்துக்கொள்வார்கள். எடப்பாடி பழனிசாமியும் உணருவார். ஆனால், சேராத இடத்தில் சேர்ந்திருக்கின்ற சூழலில் அவர் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று நான் கருதுகிறேன்.

அப்படி பேசினால் வருத்தப்படுவதற்கும் எதுவுமில்லை. 2021ம் ஆண்டில் இருந்து ஓரிரு பொதுத்தேர்தலைத் தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் தான் விசிக பயணிக்கிறது. மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து இன்று ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது. அங்கீகாரம் பெற்றிருக்கிறது. விசிக வளர்ச்சி அடைந்திருக்கிறதே தவிர.. வீழ்ச்சி அடையவில்லை. ஆகவே அவர், திரித்துப் பேசுவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com