

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 27 இடங்களில் போட்டியிட்டது. இதில் ஊட்டி தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் பா.ஜ.க. தோல்வி கண்டது.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை மயிலாப்பூர் தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியிலும், மத்திய மந்திரி எல்.முருகன் அவினாசி தொகுதியிலும் தோல்வி அடைந்தனர்.
இந்த தேர்தல் தோல்வி பா.ஜ.க.வை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த முறை 4 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் சரிவை பா.ஜ.க. சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஊட்டியில் பா.ஜ.க. சார்பில் களம் கண்ட போஜராஜன் வெற்றி பெற்றுள்ளார்.