நங்கநல்லூரில் ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் கைது

நங்கநல்லூரில் ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
நங்கநல்லூரில் ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வினர் குறித்து ஆர்.எஸ்.பாரதி சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பா.ஜ.க.இளைஞரணி செயற்குழு உறுப்பினர் வினோத்குமார் தலைமையில் சிவ.பாஸ்கர், இன்பராஜ், மீனாட்சி ஸ்ரீதர், வேதகிரி, ராஜா, சிவசங்கரன் உள்பட பா.ஜ.க.வினர் ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிட வந்தனர். இது குறித்து தகவலறிந்த மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரூபன் தலைமையில் போலீசார் முன்னெச்சரிக்கையாக உள்வட்ட சாலையில் பா.ஜ.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பா.ஜ.க.வினர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் பா.ஜ.க.வினர் 7 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.

முன்னதாக பா.ஜ.க.வினர் முற்றுகையிட வருவதை அறிந்து ஆர்.எஸ்.பாரதி வீட்டின் முன் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமையில் தி.மு.க.வினர் குவிந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com