செங்கோட்டையன் அல்லது வேலுமணியை முதல்வர் ஆக்குவதே பாஜகவின் திட்டம் - அன்வர் ராஜா


செங்கோட்டையன் அல்லது வேலுமணியை முதல்வர் ஆக்குவதே பாஜகவின் திட்டம் - அன்வர் ராஜா
x

2026 தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் வாய்ப்பு இல்லை என்று அன்வர் ராஜா விமர்சித்துள்ளார்.

சென்னை,

அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவில் இருந்து விலகிய அன்வர் ராஜா, திமுகவில் இணைந்துள்ளார்.ராமநாதபுரத்தை சேர்ந்த அன்வர் ராஜா, அதிமுக- பாஜக கூட்டணியை தற்போது கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், தந்தி டிவிக்கு அளித்துள்ள பேட்டியில் அன்வர் ராஜா கூறியிருப்பதாவது:

2026 தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் வாய்ப்பு இல்லை. செங்கோட்டையன் அல்லது வேலுமணிக்கு முதல்வர் வாய்ப்பு இருக்கலாம். பாஜக கூட்டணி முதல்வராக, பா.ஜ.க சொல்வதை அப்படியே கேட்கும் ஒருவராகவே இருக்க முடியும். அதிமுகவில் இருந்து ஒருவர் முதல்வர் என்கிறார் அமித்ஷா. ஆனால் எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லவில்லை. முதல்வர் யார்? என்பதை அதிமுக தான் முடிவு செய்ய வேண்டும்.பா.ஜ.க அல்ல" என்றார்.

1 More update

Next Story