கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
Published on

சென்னை,

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் கைது செய்யப்பட்டார்.

அதையடுத்து அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். சுரேந்திரனை தமிழகத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, அவர் ராயபுரத்தில் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை இல்லத்தில் சுரேந்தர் ஆஜர் படுத்தப்பட்டார். சுரேந்தரை வரும் 30 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் அடைக்க கடந்த 17 ஆம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது நேற்று குண்டர் சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அதே கூட்டத்தை சேர்ந்த செந்தில் வாசன் என்பவர் மீதும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com