ஜனநாயக படுகொலைக்கு எதிராக கருப்புக்கொடி அறப்போர்: திருமாவளவன்

இயக்க தோழர்கள்,விடுதலை சிறுத்தைகள் நாளை கருப்பு நிற சட்டையை அணிய வேண்டும் கருப்பு கொடிகளை ஏற்ற வேண்டும் என்று கேட்டு கொள்வதாக திருமாவளவன் தெரிவித்தார்.
ஜனநாயக படுகொலைக்கு எதிராக கருப்புக்கொடி அறப்போர்: திருமாவளவன்
Published on

சென்னை,

நாடாளுமன்ற தொகுதிக்கான மறுவரையறை தொடர்பான சட்டத்தை நாளை மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் அறிமுகபடுத்துகிறார்கள், அதை நிறைவேற்ற இருக்கிறார்கள். தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கம் ஆகிய மூன்று முக்கியமான மாநிலங்கள் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள இந்த சூழலில் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கையாகும்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு தருவதை நாம் வரவேற்கிறோம். அதற்க்கான சட்டத்தை ஏற்கனவே நிறைவேற்றிவிட்டனர். ஆனால் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2031லே முடிந்த பிறகு ஒரு கமிஷன் அமைக்கப்படும்.

அந்த கமிஷன் தரும் பரிந்துரையின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிக்கான மறுவரையறை மேற்கொள்ளப்படும் என்றுதான் சொன்னார்கள், ஆனால் அவர்கள் அந்த நிலைபாட்டை மாற்றி இப்போது அவசர அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டுகிறார்கள்.

தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்தும் எதிர்கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் களத்தில் நிற்பதால் அங்கே பங்கேற்க முடியாத சூழ்நிலையில், இந்த கூட்டத்தை கூட்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது எனவே அவசரத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.

அந்த எதிர்ப்பை அடையாளப்படுத்தும் வகையில் கருப்பு நிற சட்டையை அணிகிறோம், கருப்பு கொடியை ஏற்றுகிறோம். ஆகவே உயிரினும் மேலான விடுதலை சிறுத்தைகள் இந்த கருப்பு கொடி அறப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

அதாவது கருப்பு மேல் சட்டையை அணிய வேண்டும் இல்லத்தில் கருப்பு கொடியை ஏற்ற வேண்டும் நம் பகுதிகளில் எங்கெல்லாம் கருப்பு கொடிகளை ஏற்ற முடியுமோ அங்கெல்லாம் ஏற்ற வேண்டும் நாடாளுமன்ற தொகுதிக்கான மறுவரையறை நிறுத்த வேண்டும் என்பது தான் இந்த போராட்டதிற்கான முக்கிய கோரிக்கை ஆகும்.

எனவே இயக்க தோழர்கள்,விடுதலை சிறுத்தைகள் நாளை கருப்பு நிற சட்டையை அணிய வேண்டும் கருப்பு கொடிகளை ஏற்ற வேண்டும் என்று கேட்டு கொள்வதாக திருமாவளவன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com