ஹெச். ராஜாவுக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி - 50 பேர் கைது

கோவில்பட்டியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க எச் ராஜா காரில் சென்றார்.
Published on

கோவில்பட்டியில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க எச் ராஜா காரில் சென்றார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடிகளுடன் மந்திதோப்பு ரோடு சந்திப்பில் திரண்டனர்.

அங்கு உடனடியாக விரைந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com