முறைகேடுகள் தொடர்பான மொட்டை கடித புகார்களை விசாரிக்கலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

புகாரின் உண்மை தன்மையை உறுதிசெய்து, யார் என்ற தகவலே இல்லை என்றாலும் விசாரணை நடத்தவேண்டும்.
முறைகேடுகள் தொடர்பான மொட்டை கடித புகார்களை விசாரிக்கலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Published on
Updated on

மதுரை,

முறைகேடுகள் தொடர்பான மொட்டை கடித புகார்களை விசாரிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. முறைகேடுகள் தொடர்பான புகார் மொட்டை கடிதமாக இருந்தாலும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) விசாரிக்கலாம். புகாரின் உண்மை தன்மையை உறுதிசெய்து, யார் என்ற தகவலே இல்லை என்றாலும் விசாரணை நடத்தலாம்’’

மொட்டை கடித புகார்

மொட்டை கடித புகாரை விசாரிக்க தடை கோரிய வழக்குக்கு எதிரான தொழிலாளர் நலத்துறை இணை ஆணையரின் வழக்கை தள்ளுபடி செய்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான முறைகேடு புகார்களை முறைப்படி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com