தமிழகத்தில் வெளுத்து வாங்கிய வெயில் - பொதுமக்கள் கடும் அவதி

விழுப்புரத்தில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது.
தமிழகத்தில் வெளுத்து வாங்கிய வெயில் - பொதுமக்கள் கடும் அவதி
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயிலின் அளவு சதத்தை தொட்ட நிலையில் வெயிலின் அளவு 97 டிகிரி முதல் 99 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் இன்றும் வழக்கம்போல் காலை முதலே நகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மதிய வேளையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இதனால் சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர்.

மேலும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடைபிடித்தபடியும், முகத்தில் துணிகளை கட்டிக்கொண்டும், பள்ளி- கல்லூரி மாணவிகள், பெண்கள் துப்பட்டா மற்றும் புடவையால் தலையில் போர்த்தியபடியும் சென்றதை காண முடிந்தது.

தொடர்ந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பெரும்பாலானோர் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதனால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் சற்று குறைந்து காணப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com