ரத்த தான முகாம்

ரத்ததான முகாம் நடந்தது
ரத்த தான முகாம்
Published on

காளையார்கோவில்

காளையார்கோவிலில் இந்திய செஞ்சிலுவை சங்கம், மாஸ்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், மிதிவண்டி கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ரத்ததான முகாம் நடத்தியது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்க சேர்மன் பகிரத நாச்சியப்பன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ராகவேந்திரன், மருத்துவ அலுவலர் பாபா, ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் வசந்த் முன்னிலை வகித்தனர். காளையார்கோவில் இந்திய செஞ்சிலுவை சங்க துணை தலைவர் ஆரோக்கியசாமி வரவேற்றார். காளையார்கோவில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் சேர்மன் தெய்வீக சேவியர் ஆக்ஸிஜன் செறிவூட்டப்பட்ட கலனை மறவமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கினார். காளையார்கோவில் இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் வட்டாட்சியர் பஞ்சவர்ணம் முகாமை தொடங்கி வைத்தார். மிதிவண்டி கழகத் தலைவர் நாகராஜன், மாஸ்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பக்கீர் முகைதீன், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் அனந்த கிருஷ்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணக்குமார், கவுன்சிலர் எஸ்றா பெஞ்சமின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா. பயிற்சி மருத்துவர் ஐஸ்வர்யலெட்சுமி மற்றும் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பங்கேற்று ரத்தத்தை தானமாக பெற்றனர். இதில், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் சுரேஷ், டேவிட், சூசை ஆரோக்கிய மலர், பார்த்திபன், முத்துகுமார், ராஜா, ஜான் பீட்டர், செல்வம், விமல், ஸ்டீபன், அருளானந்தம், சேதுபாண்டியன், முத்துபாண்டி, பாலசுப்பிரமணியன் பெருமாள், கார்த்திக், சுந்தர், அனன்சியா ஆகியோர் கலந்துகொண்டனர். சங்க செயலாளர் அலெக்ஸாண்டர் துரை நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com