ரத்த தான முகாம்

பரமக்குடி அரசு கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
ரத்த தான முகாம்
Published on

பரமக்குடி, 

பரமக்குடி அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டமும், சுகாதாரத்துறையும் இணைந்து அரசு கலைக்கல்லூரியில் ரத்ததான முகாமை நடத்தின. இந்த முகாமிற்கு கல்லூரியின் முதல்வர் மேகலா தலைமை தாங்கினார். மின்னணுவியல் துறை தலைவர் பேராசிரியர் சிவக்குமார் முகாமை தொடங்கி வைத்தார். நயினார்கோவில் வட்டார மருத்துவ அலுவலர் நரேன்விக்னேஷ், மருத்துவ அலுவலர் முத்துக்குமார், வட்டார மேற்பார்வையாளர் நம்புராஜன், சுகாதார ஆய்வாளர்கள் வேல்முருகன், சந்தோஷ் முருகன், ஒருங்கிணைப்பாளர் உலகநாதன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் முகாமை நடத்தினர். இதில் 42 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். அவர்களுக்கு சான்றிதழ்களும், பழங்களும் வழங்கப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கோவிந்தன், விஜயகுமார் நன்றி கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com