கூடலூர் அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்

கூடலூர் அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
கூடலூர் அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்
Published on

கூடலூர், 

இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில், கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான செல்வகுமார், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் மோரிஸ் சாந்தா குரூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாணவர்கள் 26 பேர் ரத்ததானம் செய்தனர். இதில் பேராசிரியர் சுரேஷ்குமார, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மகேஸ்வரன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com