பெரம்பலூரில் ரத்த தான முகாம்

பெரம்பலூரில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
பெரம்பலூரில் ரத்த தான முகாம்
Published on

உலக ரத்த தான தினத்தையொட்டி பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அரிமா சங்கம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, எளம்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். முகாமில் 40 பேர் ரத்த தானம் செய்தனர். மேலும் முகாமில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் உயிர் காக்கும் அவசர முதலுதவி பயிற்சி முகாம் நடந்தது.

முகாமில் அதிக முறை ரத்த தானம் வழங்கியவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். முன்னதாக உலக ரத்த தான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகள் ஆட்டோக்களில் ஒட்டப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com