அரசு பள்ளியில் ரத்ததான முகாம்

அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அரசு பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது.
அரசு பள்ளியில் ரத்ததான முகாம்
Published on

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அரசு பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் தர்பார், செயலாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கோகுல்ராம் வரவேற்றார். நிகழ்ச்சியில் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இதில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு ரத்தம் சேகரித்தனர். பின்னர் ரத்ததானம் செய்தவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மூங்கில்துறைப்பட்டு மருத்துவ அலுவலர் பிரசன்னா, ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், கள்ளக்குறிச்சி ரத்த வங்கி அலுவலர் விஜயகுமார், வணிகர் சங்க நிர்வாகிகள் அருள்ஜோதி, விஜய்ஆனந்த், சரவணன், ஜெயபால், சிவகுமார், சிராஜ், ஆல்பர்ட், நசீர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com