தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம்

தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம் நடைபெற்றது.
தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம்
Published on

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தொல்.திருமாவளவன் மணிவிழா மற்றும் 61-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அம்பேத்வளவன் தலைமை தாங்கினார். தலைமை மருத்துவர் பெரியசாமி முன்னிலை வகித்தார். முகாமில் அம்பேத்வளவன் உள்பட 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்கி முகாமை சிறப்பித்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் உள் நோயாளியாக உள்ள 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு பழங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமில் அறந்தாங்கி மருத்துவமனையின் ரத்த வங்கி செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள், ஆலங்குடி மருத்துவமனையின் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். எம்.ராசியமங்கலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் செபஸ்தியான் தலைமையில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், மாநில துணை செயலாளர் கலைமுரசு, மாவட்ட செய்தி தொடர்பாளர் திருமாறன், தொகுதி செயலாளர் விஜயபாஸ்கர், புஷ்பராஜ், ரமேஷ், பிரபாகரன், குணசேகரன், அறத்தை தொகுதி செயலாளர் பாண்டி, ஆசிரியர் சிவகுமார், அம்பேத்கர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலங்குடி பழைய நீதிமன்றம் அருகில் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com