படகு விபத்தில் தமிழர்களுக்கு உதவ சேலம் டி.ஐ.ஜி. வியட்நாம் செல்கிறார்-முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

வியட்நாமுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் படகு கடலில் கவிழ்ந்து தமிழர்கள் 10 பேர் பலியா னார்கள். இந்த விபத்தில் ஆந்திரா, கேரளத்தைச் சேர்ந்த 5 பேரும் உயிரிழந்தனர்.
படகு விபத்தில் தமிழர்களுக்கு உதவ சேலம் டி.ஐ.ஜி. வியட்நாம் செல்கிறார்-முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு
Published on

சென்னை,

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள் பட இந்தியர்கள் 15 பேர் பலியாகினர். இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, முதல்-அமைச்சர் விஜய் தற்போதைய சூழ்நிலையை ஆய்வு செய்து, வியட்நாமில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் இணைந்து, உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வரும் பணிகளை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை வசதிகளை எளிதாக்கவும் தமிழ்நாடு அரசின் சார்பில் சந்தோஷ் ஹடிமானி ஐ.பி.எஸ். (டி.ஐ.ஜி. சேலம்) அதிகாரியை வியட்நாமின் ஹோச மின் நகரத்திற்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com