கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் தாழ்வு - தொடர்ந்து 4 வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்திவைப்பு..!

கன்னியாகுமரியில் தொடர்ந்து 4-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் தாழ்வு - தொடர்ந்து 4 வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்திவைப்பு..!
Published on

கன்னியாகுமரி,

கடந்த சில நாட்களாக கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கான படகு போக்குவரத்து தாமதமாக புறப்பட்டது. இந்நிலையில் 4 வது நாளாக இன்றும் படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

படகு போக்குவரத்து

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்து விட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.

பின்னர், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து ரசித்து விட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

அதன்படி இன்று காலையிலும் பூம்புகார் படகுத்துறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அப்போது, விவேகானந்தர் மண்டபம் உள்ள கடல் பகுதியில் திடீரென நீர்மட்டம் தாழ்ந்தது. இதனால், காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால், அங்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நீர்மட்டம் தாழ்வு காரணமாக தொடர்ந்து 4-வது நாளாக தாமதமானது குறிப்பிடதக்கது. தொடர்ந்து 11 மணிக்கு மேல் கடல் நீர் மட்டம் சரியானால் படகு போக்குவரத்து தொடரும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com