விவேகானந்தர் மண்டபத்துக்கு 4-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்

விவேகானந்தர் மண்டபத்துக்கு 4-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்
விவேகானந்தர் மண்டபத்துக்கு 4-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்
Published on

கன்னியாகுமரி:

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது.

கடந்த 3 நாட்களாக கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து தாமதமாக தாடங்கியது.

இந்தநிலையில் நேற்று காலையிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால், காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. பின்னர், காலை 11 மணியளவில் கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 3 மணிநேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. அதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்துவிட்டு திரும்பினர். ஆனால், நீர்மட்டம் தாழ்வு காரணமாக வட்டக்கோட்டைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com