போடி, பெரியகுளத்தில்கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

போடி, பெரியகுளம் பகுதியில் உள்ள கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
போடி, பெரியகுளத்தில்கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
Published on

புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி நேற்று, போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கொண்டரங்கி மல்லைய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பரமசிவன் மலைக்கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், பிச்சாங்கரை கீழசொக்கநாதர், மேலசொக்கநாதர் கோவில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை நடைபெற்றது.

இதேபோல், பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி, அதிகார நாகராஜர், நந்திபகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள். இளநீர், தேன் உள்ளிட்ட 21 வகை அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மல்லிகை பூ, ரோஜா, தாமரை, அரளி, பிச்சி உள்ளிட்ட பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. நந்திகேஸ்வரருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக் கோவில், காளஹதீஸ்வரர் கோவில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com