போடி, பெரியகுளத்தில்கோவில்களில் பிரதோஷ வழிபாடு

போடி, பெரியகுளம் பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
போடி, பெரியகுளத்தில்கோவில்களில் பிரதோஷ வழிபாடு
Published on

பிரதோஷத்தையொட்டி நேற்று, போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கொண்டரங்கி மல்லைய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சிவ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், பரமசிவன் மலைக்கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், பிச்சாங்கரை கீழசொக்கநாதர் கோவில், மேலசொக்கநாதர் கோவில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிவ பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதேபோல், பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அதிகார நாகராஜர், நந்திபகவானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள். இளநீர், தேன் உள்ளிட்ட 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மல்லிகை பூ, ரோஜாபூ, தாமரை பூ, அரளி பூ, பிச்சி பூ உள்ளிட்ட பூக்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் மலைக் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com