வியட்நாம் படகு விபத்தில் பலியான 10 பேரின் உடல்கள் தமிழகம் வந்தன

பலியானவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகம் தீவிரமாக மேற்கொண்டது.
வியட்நாம் படகு விபத்தில் பலியான 10 பேரின் உடல்கள் தமிழகம் வந்தன
Published on

சென்னை,

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் இருந்து வியட்நாமுக்கு சுற்றுலா சென்றவர்கள். கடந்த 11-ந்தேதி அங்கு படகு சவாரியில் ஈடுபட்டனர். இதில் 3 பேருடன் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர், கேரளத்தில் இருந்து 2 பேர், ஆந்திராவில் இருந்து 3 பேர் என 15 பேர் உயிரிழந்தனர் அவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் தீவிரமாக மேற்கொண்டது.

இதற்காக தமிழகத்தில் இருந்து சிறப்பு அதிகாரி ஒருவரும் அனுப்பி வைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து 15 பேரின் உடல்களும் வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்றிரவு மும்பை வந்தன.

இந்த நிலையில், படகு கவிழ்ந்த விபத்தில் பலியான 10 பேரின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டன. மும்பையில் இருந்து விமானம் மூலம் 4 பேரின் உடல்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. மீதம் 6 பேரின் உடல்கள் கோவை சென்றடைந்தது. அயலகத் தமிழர் நல வாரிய அதிகாரிகள் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரவர்களின் சொந்த ஊருக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com