பொம்மிடி அருகே ரெயில் தண்டவாளத்தில் குடிநீர் தொட்டி ஆபரேட்டர் உடல் கொலையா? பாலீசார் விசாரணை

பொம்மிடி அருகே ரெயில் தண்டவாளத்தில் குடிநீர் தொட்டி ஆபரேட்டர் உடல் கொலையா? பாலீசார் விசாரணை
பொம்மிடி அருகே ரெயில் தண்டவாளத்தில் குடிநீர் தொட்டி ஆபரேட்டர் உடல் கொலையா? பாலீசார் விசாரணை
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதியில் பொம்மிடி- புட்டிரெட்டிபட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக மொரப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் கடத்தூர் அருகே உள்ள திண்டாலானூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 55) என்பதும், இவர் கடத்தூர் பேரூராட்சியில் குடிநீர் தொட்டி ஆபரேட்டராக தற்காலிகமாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் ராமகிருஷ்ணன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அவர் கொலை செய்யப்பட்டு உடல் ரெயில் தண்டவாளத்தில் வீசப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் தண்டவாளத்தில் குடிநீர் தொட்டி ஆபரேட்டர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com