கிணற்றில் இளம்பெண் பிணம்

கிணற்றில் இளம்பெண் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் இளம்பெண் பிணம்
Published on

காவேரிப்பாக்கம்

கிணற்றில் இளம்பெண் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகள் ராசாத்தி (வயது 22). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினர். இந்த நிலையில் நேற்று காவேரிப்பாக்கத்தில் உள்ள கட்டளை பாட்டை தெருவில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ராசாத்தி பிணமாக மிதப்பதை கண்ட அங்கிருந்தவர்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்த மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசாத்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com