திருத்தணி அருகே தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த தொழிலாளி உடல் - ரெயில்வே போலீசார் விசாரணை

திருத்தணி அருகே தண்டவாளத்தில் தொழிலாளி உடல் சிதறி கிடந்தது.
திருத்தணி அருகே தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த தொழிலாளி உடல் - ரெயில்வே போலீசார் விசாரணை
Published on

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி அடுத்த தரணிவராகபுரம் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல், தலை, கை, கால்கள் ஆங்காங்கே சிதைந்து கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உத்தரவின்படி, சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளங்களில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த வாலிபரின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த நபர் திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 31) என்பதும், இவர் ரெயிலில் டீ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த ஆனந்த் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரெயிலில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இதைபோல பேரம்பாக்கம் அருகே உள்ள மப்பேடு வெள்ள கால்வாய் பகுதியில் தனியார் கம்பெனி ஒன்று உள்ளது. இங்கு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மகாஷர் பவுரி (வயது 28) என்பவர் 3 ஆண்டுகளாக தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். மகாஷர் பவுரி மற்றும் அவருடன் வேலை செய்யும் சக தொழிலாளார்கள் சிலர் கம்பெனி அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். நேற்று முன்தினம் மகாஷர் புவுரி வீட்டில் இருக்கும்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதைக் கண்ட சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பூந்தமல்லி உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com