மெரினாவில் கடல் அலையில் சிக்கி மாயமான மாணவர் உடல் கரை ஒதுங்கியது

துறைமுகம் கடற்கரை பகுதியில் மாணவரின் உடல் கரை ஒதுங்கியது.
மெரினாவில் கடல் அலையில் சிக்கி மாயமான மாணவர் உடல் கரை ஒதுங்கியது
Published on

சென்னை,

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவருடைய மூத்த மகன் சுதர்சன் (16). பிளஸ்-1 மாணவரான இவர், கடந்த 22-ந்தேதி மெரினா கண்ணகி சிலை பின்புறம் கடலில் விளையாடியபோது, ராட்சத அலையில் சிக்கி மாயமானார். மெரினா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் மீட்பு குழு மாணவரை தீவிரமாக தேடியது.

கடலோர காவல் படையினரும் போலீசாருடன் இணைந்து சுதர்சனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மெரினா கடலில் மாயமான சுதர்சனின் உடல், நேற்று துறைமுகம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com