மெரினா கடலில் கரை ஒதுங்கிய மாயமான பள்ளி மாணவன் உடல்

ராட்சத அலையில் சிக்கி மாயமான பள்ளி மாணவன் உடல் மெரினா கடலில் கரை ஒதுங்கியது.
மெரினா கடலில் கரை ஒதுங்கிய மாயமான பள்ளி மாணவன் உடல்
Published on

சென்னை கோடம்பாக்கம் குமரன் காலனியை சேர்ந்தவர் அருள் (வயது 14). அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை மெரினா கடலில் தனது நண்பர்களான யோகேஸ்வரன் (14), தர்ஷன் (10) ஆகியோருடன் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது ராட்சத அலையில் சிக்கி அருள் உள்பட 3 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கடலோர காவலர்கள் 3 பேரையும் மீட்க முயன்றனர். இதில் யோகேஸ்வரன் மற்றும் தர்ஷனை மட்டும் மீட்டனர். ஆனால் அருள் தண்ணீரில் மூழ்கிய சிறிது நேரத்தில் காணாமல் போனார். கடந்த 2 நாட்களாக கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் ராட்சத அலையில் சிக்கிய அருளை தேடி வந்தனர்.

இந்தநிலையில், நேற்று காலை மெரினா கடற்கரையில் ஒதுங்கிய அருள் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com