தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையரின் உடல் ஏரியில் இருந்து மீட்பு


தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையரின் உடல் ஏரியில் இருந்து  மீட்பு
x

செந்தில்வேல் தற்கொலை செய்து கொண்டாரா, வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை,

தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையராக இருந்த செந்தில்வேல் உடல் சென்னை போரூர் ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. துணை ஆணையரின் உடல் சென்னை போரூர் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டாரா? தற்கொலைக்கான காரணம் என்ன? பணிச்சுமையா? கடன் தொல்லையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போரூரில் வசித்து வந்த செந்தில்வேல் செங்கல்பட்டு வணிக வரித்துறை அலுவலகத்தில் துணை ஆணையராக பணியாற்றி வந்தார். செந்தில்வேலை காணவில்லை என்று அவரது உறவினர்கள் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில்தான், அவரது உடல் போரூர் ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. .தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையரின் உடல் போரூர் ஏரியிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதன் முடிவுகளுக்குப் பிறகே, செந்தில்வேல் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

1 More update

Next Story