ஓட்டல் கழிவுநீர் குட்டையில் வாலிபர் பிணம்

கலசபாக்கம் அருகே ஓட்டல் கழிவுநீர் குட்டையில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர், அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டல் கழிவுநீர் குட்டையில் வாலிபர் பிணம்
Published on

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு பின்புறம் கழிவுநீர் குட்டையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் மிதப்பதாக கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கழிவுநீர் குட்டையில் இருந்து உடலை வெளியே எடுத்தனர்.

இதனையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்?, முன்விரோத தகராறில் அவரை யாராவது அடித்துக்கொலை செய்து கழிவுநீர் குட்டையில் போட்டு விட்டு சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com