கிணற்றில் வாலிபர் பிணம்

சாணார்பட்டி அருகே கிணற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
கிணற்றில் வாலிபர் பிணம்
Published on

நத்தம் அருகே உள்ள கணவாய்பட்டி எஸ்.கொடை கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 23). கடந்த 12-ந்தேதி இவர், வீட்டைவிட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் ஆண் பிணம் மிதந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து, கிணற்றில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டனர். விசாரணையில் இறந்து கிடந்தவர், தனபால் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் வழக்குப்பதிவு செய்து, தனபால் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா?, கிணற்றில் குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com