ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணம்

ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணம் மீட்கப்பட்டது.
ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணம்
Published on

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அன்பு நகர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 28) என்பதும், இவர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்ததும், வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து டவுன் போலீசார் விருதுநகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com