போகிப் பண்டிகை - நயினார் நாகேந்திரன் வாழ்த்து

அனைவருக்கும் போகிப் பண்டிகை வாழ்த்துகள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழர் திருநாளான பொங்கலை வரவேற்கும் விதமாக, இன்று போகிப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வாய்ப்பாக இந்த நாள் அமைகிறது. அதன்படி போகிப் பண்டிகை அன்று மக்கள் தீ மூட்டி பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரிக்கின்றனர்.
இந்த நடைமுறையானது தேவையற்ற சோகங்கள், தீய எண்ணங்கள் போன்றவற்றை எரித்து அழித்து, மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றை வரவேற்பதை பிரதிபலிக்கிறது. இந்த நல்ல நாளில் நமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றாக இணைந்து பழையவையான பயன்படாத இந்த தீய சக்தி ஆட்சியை தமிழ்நாட்டில் இருந்து அகற்றி, நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்திட சூளுரைப்போம்.
இந்த போகி பொங்கல் 2026 உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், சிறந்த ஆரோக்கியத்தையும், ஆன்மீகத்தையும் கொண்டு வரட்டும்
அனைவருக்கும் போகிப் பண்டிகை வாழ்த்துகள்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






