

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணக்கரை பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார்.
இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய துரை முத்து என்ற குற்றவாளியை பிடிக்கச் சென்றபோது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வெடிகுண்டு வீசிய நபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.