தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வனப்பகுதியில் வெடிகுண்டு வீச்சு காவலர் பலி

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மனக்கரை வனப்பகுதியில் வெடிகுண்டு வீச்சு காவலர் பலியானார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வனப்பகுதியில் வெடிகுண்டு வீச்சு காவலர் பலி
Published on

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மனக்கரை வனப்பகுதியில் ஸ்ரீவைகுண்டம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளி ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து விரைந்து சென்று அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீது குற்றவாளி வெடிகுண்டு வீசி உள்ளனர். இதில் போலீஸ்காரர் சுப்பிரமணியம் என்பவர் பலியானார். அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது,மேலும் ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்து உள்ளார்.

போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் ஒருவரை கைது செய்தனர். ஆயுதங்களுடன் வாகனம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com