கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்


கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
x

கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில், புதிய கட்டிடம் மற்றும் பழைய கட்டிடம் என்று 2 கட்டிடங்கள் உள்ளன. இதில் புதிய கட்டிடத்தில் கலெக்டர் அறை, மாவட்ட வருவாய் அதிகாரி அறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை, கனிமவளத்துறை, வேளாண்மைத்துறை உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.

அதுபோன்று பழைய கட்டிடத்தில் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு, சமூக நலத்துறை, நிலவரித்துறை, தமிழ்வளர்ச்சித்துறை, உள்பட பல்வேறு துறைகளும் உள்ளன. இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில், கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மர்ம நபர்கள் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள்னர். கடிதம் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் கலெக்டர் அலுவலக வளாகம், கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story