அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு  வெடிகுண்டு மிரட்டல்
x

எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிகிறது.

வெடிகுண்டு மிரட்டலையடுத்து, விரைந்து சென்ற வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் அங்கு தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில், வெடி குண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கடந்த மாதமும் இதேபோல எடப்பாடி பழனிசாமியின் சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

1 More update

Next Story