நாக்பூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

விமான நிலையத்தில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்திய நிலையில், பயணிகளின் உடைமைகளிலும் சோதனை நடத்தினர்.
நாக்பூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம், நாக்பூர் விமான நிலையத்துக்கு நேற்று காலை இ-மெயில் ஒன்று வந்தது. இந்த மெயிலில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார், வெடிகுண்டு தடுப்பு படையினர் விமான நிலையத்துக்கு விரைந்து வந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

விமான நிலையத்தில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்திய நிலையில், பயணிகளின் உடைமைகளிலும் சோதனை நடத்தினர். இது பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த சோதனையில் சந்தேகப்படும்படி எதுவும் சிக்கவில்லை. பதற்றத்தை ஏற்படுத்த யாரோ விஷமி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com