நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 13 Feb 2025 8:05 AM IST (Updated: 13 Feb 2025 12:46 PM IST)
t-max-icont-min-icon

பல பயணிகள் இந்த ரெயில் நிலையத்திற்கு வரும் நிலையில் இப்படி ஒரு மிரட்டல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அங்கு மோப்ப நாயுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனைவில் ஈடுபட்டனர். இந்நிலையில் தீவிர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. பல பயணிகள் இந்த ரெயில் நிலையத்திற்கு வரும் நிலையில் இப்படி ஒரு மிரட்டல் அவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story