நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்


நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 28 Sept 2025 9:08 PM IST (Updated: 9 Oct 2025 7:42 AM IST)
t-max-icont-min-icon

நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜயின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டுக்கு ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 15 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது வீடு உள்ள சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலமாக டிஜிபி அலுவலத்திற்கு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் விஜய் வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் டிஜிபி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story