திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக உடனடியாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். நீண்ட நேர சோதனையின் முடிவில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படாததால், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com