நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மது ஆஸ்பத்திரியில்தொடர்பு கொண்டுvv அரசு ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
நெல்லை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலையில் தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர்முனையில் பேசிய நபர், ''நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைத்துள்ளேன், ஆஸ்பத்திரியை தரைமட்டமாக்கி விடுவேன்'' என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து உடனடியாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அங்குலம் அங்குலமாக தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. கட்டுப்பாட்டு அறைக்கு ெதாடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி முத்துபெருமாள் (வயது 42) என்பதும், இவர் தற்போது உவரியை அடுத்த குஞ்சன்விளை பகுதியில் வசித்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து நேற்று காலையில் முத்துபெருமாளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் முத்துபெருமாள் பாளையங்கோட்டை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அங்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டும் எனவும், அவ்வாறு சிகிச்சை பெறுவதற்கு முத்துபெருமாளை கவனித்துக்கொள்ள கூடுதலாக ஒருவர் இருக்க வேண்டும் என்று கூறி டாக்டர்கள் அவரை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் ஆத்திரத்தில் மது குடித்த முத்துபெருமாள் தனது வீட்டுக்கு சென்று அங்கிருந்து மது போதையில் செல்போனில் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






