நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்


நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
x

நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகரும், தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசி மூலம் தொடர்ப்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் விஜய் வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story