கவர்னர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்


கவர்னர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x

3 மணி நேரத்திற்கும் மேல் நடந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.

சென்னை,

டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மர்ம கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டிலும், கவர்னர் மாளிகையிலும் சற்று நேரத்தில் குண்டு வெடிக்க போகிறது என்று கூறப்பட்டிருந்தது. உடனடியாக போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிலும், கவர்னர் மாளிகையிலும் வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்பநாயுடன் சோதனை நடத்தினார்கள்.

3 மணி நேரத்திற்கும் மேல் நடந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்த மர்ம கடிதம், மிரட்டல் கடிதம் என்று தெரியவந்தது. இதுபோல பலமுறை இ-மெயில் வாயிலாக தொடர்ந்து மிரட்டல் கடிதம் வந்தவண்ணம் உள்ளது. எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கும், கவர்னர் மாளிகைக்கும் இதுபோல பலமுறை வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள். இ-மெயில் மிரட்டல் கடிதங்கள் வெளிநாட்டில் இருந்து வருவதால் போலீசாரால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story